ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்தது

கணக்கில்காட்டாத வருமானத்தையும் சொத்து களையும் தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் மொத்தம் ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப்பணம் வெளிவந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


கணக்கில்வராத கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் அது பற்றிய விவரங்களைத் தாமாக முன்வந்து அறிவிப்பதற்கு ஐடிஎஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு 4 மாதங்களுக்குமுன் அறிமுகம் செய்தது. இந்தவிவரங்களை வெளிப்படுத்துவதற்கு கடந்தமாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதிதான் கடைசிநாள் என்றும் தெரிவித்தது.
இத்திட்டத்துக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய நிதி யமைச்சர் அருண்ஜேட்லி, தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:


ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் 64,275 பேர் கணக்கில்வராத தங்களது வருவாய் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தி யுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.65,250 கோடியாகும். இந்தத்தொகையில் 45 சதவீதம் அளவுக்கு வரியாகவும், அபராதமாகவும் அரசுக்குச்செல்கிறது. மத்திய நிதித்தொகுப்புக்கு செல்லும் இந்தநிதியானது மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.


இத்திட்டமானது, கடந்த 1997ஆம் ஆண்டில் ஐக்கியமுன்னணி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட கணக்கில் வராத வருவாயை அறிவித்தால் மன்னிப்பு என்ற திட்டம் போன்றதல்ல. அப்போதைய திட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட வரியின் மதிப்பு ரூ.9,760 கோடி மட்டுமே.


வருமான வரித்துறை கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய அதிரடிச்சோதனைகள் மூலம் ரூ.56,378 கோடி அளவுக்கு கருப்புப்பணம் கண்டறியப் பட்டுள்ளது.


இதுதொடர்பாக ரூ.2,000 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தவிர, வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்யாத வர்களிடம் இருந்து கடந்த இரு ஆண்டுகளில் ரூ.16,000 கோடி வசூலிக்கப் பட்டது என்றார் அருண் ஜேட்லி.


தற்போது தங்களது கருப்புப்பணத்தை தாமே முன்வந்து வெளியிட்டுள்ளவர்கள் மூலம் ரூ.30,000 கோடி வரை அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்தார். இந்தத்தொகையில் பாதி அளவு நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...