பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்த, 'வீடியோ' ஆதாரத்தை, மத்தியரசு வெளியிடவேண்டும்' என, கோரிக்கை விடுத்த, ஆம் ஆத்மியைச் சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடும்கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பாக்., ஊடகங்கள், கெஜ்ரிவால் கோரிக்கையை தலைப்புசெய்தியாக்கி உள்ளன; பாகிஸ்தானின் கோரிக்கைக்கு, அவர் வலுசேர்த்துள்ளார்.பா.ஜ., மற்றும் மத்திய அரசு மீது, அவருக்கு அரசியல் ரீதியாக கருத்துவேறுபாடு இருக்கலாம்; ஆனால், நாட்டிற்கு ஒருபிரச்னை என்றால், ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
பா.ஜ.,வை அவர் நம்பவேண்டாம்; ஆனால், நம் ராணுவத்தை அவர் நம்பவேண்டும். இது போலவே, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமும், வீடியோ ஆதாரத்தை வெளியிடகோரியுள்ளார். அவரது கருத்து, காங்கிரசின் கருத்தா என்பதை, அக்கட்சி விளக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.