சரஸ்வதி தேவியின் மகிமை

ஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.
இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து பயன் பெற்ற பலர் உண்டு.வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதவேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்தபொறுப்பை ஒட்டக் கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்தி தேவியையும் வணங்கி ஒட்டக் கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயணகாவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்துபணியாற்ற சொல்வதா?” என்று கடும்கோபம் அடைந்தார் ஒட்டக் கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர்போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கியபணியை சிறப்பாக செய்துகொண்டு இருந்தார். ஒட்டக் கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்பட வில்லை.
ஆனால் ஒட்டக்கூத்தரோ விரோதமனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணைபார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக் கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்க வில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக்கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறுகறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதி தேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப்பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.
வால்மீகி இராமாயணத்தை இயற்றியவர்
சோழ அரசர் ஒரு நாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக் கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயணத்தை அதிகளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்கமுடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதிமுடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகிகொண்டார்.
இராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவியபாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள்பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டுமகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதைகண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால் தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ்பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரிய சாலியாகவும் இருப்பார்கள். கற்றகல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சரஸ்வதியின் அருள்பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன்பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...