காவிரி மேலாண்மைவாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்கமுடியாது என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்துதான், மேலாண்மை வாரியத்தை அமைக்கமுடியும் என்று அவர் கூறினார். இருமாநில தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு சரியில்லை என்று கூறியவர் பாரதிய ஜனதா பிரமுகர்கள் கொலை விசயத்தில் தொடர்புடையவர்கள் மீது மேண்மையான அணுகுமுறையை தமிழக அரசு பின்பற்றுவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் உடல் நிலையை கருதி துணை முதலமைச்சரை நியமிக்கவேண்டும் என பாரதிய ஜனதா கூறாது என்று முரளிதரராவ் தெரிவித்தார். தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது என்று கூறியவர் இந்த விஷயத்தில் சுப்பிரமணிய சாமி கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.