தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்காகோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்புவழிபாடு செய்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். முதல்வர் நலம் பெறவேண்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பாஜக. முன்னாள் எம்.பி. தருண்விஜய், ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்புவழிபாடு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுவரின் புகழ் நாடுமுழுவதும் பரவுவதற்கு முதலமைச்சர் ஜெயலலி தாவின் உதவி பேருதவியாக இருந்தது. அவரது உதவிமூலம் எங்களுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இந்தநிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வீடுதிரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக ஹரித்துவார் கங்காகோவில் மற்றும் கேதர்நாத் கேதா ரீஸ்வரர் கோவிலில் சிறப்புவழிபாடுகள் நடத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...