தற்பொது மேற்கொள்ளப் பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள், உலகளவில் ஏற்படக் கூடிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
"பிரிக்ஸ்' (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் அமைப்பின் மாநாடு கோவாவில் வெள்ளிக் கிழமை (அக். 14) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, பிரிக்ஸ்நாடுகளின் முதலீடு குறித்த கருத்தரங்கு மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்று அருண்ஜேட்லி பேசியதாவது:கடந்த இரண்டரை ஆண்டுகளாக அன்னிய முதலீகளுக்கு அனுமதி அளிக்கக் கூடிய பெரும்பாலான துறைகள் முறைப்படுத்தப்பட்டு, முதலீட்டுமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டன.
நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைந்ததற்கு பிறகு, தானியங்கி முறையில் அன்னியமுதலீடுகள் மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்தியாவுக்கு வரும் அன்னிய முதலீடுகள் இந்த எளிமையான தானியங்கி முறையிலேயே மேற்கொள்ளப் படுகின்றன.இதன் காரணமாக முதலீடுகள் சுமுகமாக நடை பெறுவதால், அன்னிய முறையீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் எந்தமுறையீடும் செய்யப்படவில்லை.
உலகளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அந்தநிலையை சமாளிக்க இந்தியாவால் முடியும்.
உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து இந்திய பொருளாதாரத்தைப் பாதுகாக்க, எமது அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள் உதவும்.மத்திய அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்து வதையும், அன்னிய முதலீடுகளைக் கவர்வதையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. கடந்த சிலஆண்டுகளாக இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் போட்டியிடும் திறன் கணிசமாக அதிகரித்துவருகிறது. இதற்கு, மத்திய அரசின் கொள்கை திட்டங்கள் உறுதுணையாக உள்ளன.
இந்தியாவை முதலீடுகளுக்கு உகந்த நாடாகத் திகழச்செய்வதிலும், இந்திய தயாரிப்புகளின் தரத்தை உயர்த்துவதிலும் மாநில அரசுகளும் பங்குவகிக்கின்றன."பிரிக்ஸ்' அமைப்பின் மூலம், புதியமேம்பாட்டு வங்கி உருவாக்கப்பட்டு, அதன் நிதியளிப்புடன் புதியதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வருங்காலத்தில் சுங்கவரி மற்றும் பிற வரி விதிப்புகளில் பிரிக்ஸ் நாடுகளிடையே கூடுதல் ஒத்துழைப்பு ஏற்படும்.
உலகமக்கள் தொகையில் 40 சதவீதத்தினரையும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதியையும் கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகள், கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
அண்மைக்காலமாக, உலகின் சிலநாடுகள் தங்களது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதற்காக உலகநாடுகளின் மீது பொருளாதாரக் கெடுபிடிகளை விதிக்கும் நிலை உருவாகிவருவது கவலையளிக்கிறது. எனினும், பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு முன்னர் பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக எழுந்தகுரல்கள், வாக்கெடுப்புக்குப் பின் அடங்கிப் போயின.அதுபோல, அமெரிக்காவிலும் தற்போது அதிபர் தேர்தலில் பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசாரம், தேர்தலுக்கு பின் ஓய்ந்துவிடும் என்றார் ஜேட்லி.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.