மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கட்டப்பட்ட ராணுவ நினை விடத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும்தான் காட்டும் என்று கூறினார்.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில், நாட்டுக்காக போரிட்டு தங்கள் உயிரைநீத்த ராணுவ வீரர்களை கெளரவிக்கும் வகையில், போர்வீரர்கள் நினைவிடம் ஒன்று கட்டப் பட்டுள்ளது. 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் இந்தநினைவிடம் உருவாக்கப் பட்டுள்ளது. நினைவிடத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நாளில், நமது துணிச்சல்மிகுந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை ஒருபெரும் வாய்ப்பாக கருதுகிறேன்.
ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புபடையினர், கடலோர காவல்படையினர் தங்களது உயிரை தியாகம் செய்வதால்தான் நாம் அமைதியாக உறங்குகிறோம். ராணுவம் பேசாது, வீரத்தை மட்டும்தான் காட்டும். அதேபோல்தான் நம்முடைய ராணுவ அமைச்சரும் பேசமாட்டார், அனைத்தையும் செயலில் காட்டுவார். ஸ்ரீநகரில் கடந்தஆண்டு வெள்ளத்தின் போது ராணுவத்தினர்தான் மீட்புபணியில் ஈடுபட்டு பெரும்பாலான மக்களை மீட்டனர்.
அப்பொழுது உதவி செய்யும்போது ஸ்ரீநகர் மக்கள் தானே நம் மீது கல் எறிந்தார்கள் என்று ஒரு போதும் ராணுவத்தினர் நினைக்க வில்லை.அதேபோல் உள்நட்டுபோர் சமயத்தில் ஏமனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் சில பாகிஸ்தானியர் களையும் இந்திய ராணுவம்மீட்டது. மக்களுக்கு உதவராணுவம் தயார் நிலையில் உள்ளது.
உலகிலேயே இந்தியராணுவம் மட்டும்தான் மக்களுக்காக பாடுபடுகிறது. ராணுவத்தின் முன் இந்தியர்கள் அனைவரும் சமம். ஐநா அமைதிப் படைக்கு அதிகளவில் படைபணிகளை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவவீரர்களின் சீருடை மற்றும் வீரம் குறித்து மட்டுமே நாம் பேசுகிறோம். அவர்கள் மனிதாபி மானத்தின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
இப்படிப்பட்ட ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 'ஒரே பதவி; ஒரே ஒய்வூதியம்' திட்டத்தை கொண்டுவந்தது பாஜக அரசுதான். ராணுவம், எல்லை பாதுகாப்புபடை, கடற்படை போன்ற படைகளின் வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம்செய்வதன் காரணமாகத் தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.