பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணு வத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஒரு குட்டிதீபாவளி போல மக்கள் கொண்டாடியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், நமது ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலியையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாராணசியில் எரிவாயுக்குழாய் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மோடி திங்கள் கிழமை தொடக்கி வைத்தார்.
இதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எந்த நாட்டின் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் இந்திய ராணுவத்தினருக்கு என்றுமே இருந்ததில்லை. அதே சமயத்தில், நம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை நமது ராணுவத்தினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.
அண்மையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதல் இதற்கு ஓர் உதாரணமாகும். இந்த தாக்குதலை நாட்டுமக்கள் ஒருகுட்டி தீபாவளி போல கொண்டாடினர். குறிப்பாக, வாராணசியில் இந்த கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராணுவத்தினரின் வீரத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்கள் மிகவும் பெருமை யடையச் செய்வதாக இருந்தன.
புதியசெயலி அறிமுகம்: இந்நிலையில், நமது ராணுவத் தினருக்கு உங்களது பாராட்டுகள் நேரடியாக சென்றடையும் விதமாக புதியசெயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, உங்கள் செல்லிடப் பேசியிலிருந்து "1922' என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இதற்கான செயலிபதவிறக்கம் ஆகும். அதனை பயன் படுத்தி ராணுவத்தினரை நீங்கள் பாராட்ட முடியும் என்றார் நரேந்திர மோடி.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.