மதுரைக்கு ரூ.5 ஆயிரம் கோடியில் சுற்றுச் சாலை அமைக்கப்பட இருப்பதாக மத்திய கப்பல் மற்றும் தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109 வது பிறந்த நாள்விழா மற்றும் 54 வது குரு பூஜை அனுஷ்டிப்பு ஆகியனவற்றை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் மலர்வளையும் வைத்து அஞ்சலிசெலுத்திய பின்னர் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியது..
தேவர் திருமகன் எந்த லட்சியத் துக்காக பிறந்தாரோ,வாழ்ந்தாரோ அதேபோல வாழ்ந்து அந்த லட்சியத்தை நிலைநாட்டிய வராகவும் இருந்தார்.அவரது வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றித்தான் பிரதமர் மோடியும்,மத்திய அரசும் செயல்பட்டுவருகிறது.தமிழகத்தில் தேவரின் வழிகாட்டல்களோடு தொடர்ந்து பா.ஜ.க.வும் பயணிக்கும்.மதுரை மிகமுக்கிய நகரமாகும்.மதுரையில் தான் தேவர் திருமகன் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.மதுரையில் அருள்மிகு மீனாட்சி யம்மன் திருக்கோயிலும் உள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளாக உள்ள nh 7,nh 45b,nh 49,nh 208 ஆகியனவற்றை இணைக்கும் வகையில் மதுரைக்கு ரூ.5 ஆயிரம்கோடியில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அமைச்சருடன் கட்சியின் தேசியசெயலாளர் ஹெச்.ராஜா,துணைத் தலைவர்கள் பி.டி.அரசகுமார், து.குப்புராமு,மாநிலசெயற்குழு உறுப்பினர் நாகராஜன்,ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.