சுதந்திர இந்தியாவில் அதிகளவில், மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முக்கியநகரமான கன கோனாவில் நடைபெறும் இந்தியா ஐடியா மாநாடு – 2016 ஐ பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கிவைத்தார். விழாவில்பேசிய அவர், சுதந்திர இந்தியாவில் அதிகளவில், மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். விமர்சனத்தை வரவேற்கிறோம். விமர்சனம் நிச்சயம் சகித்துகொள்ள வேண்டியதுதான். ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் நாட்டைப்பற்றி அளவுக்கு மீறி விமர்சித்தால் அதனை மன்னிக்க முடியாது.
கருத்து வேறுபாடுகள் என்பது ஜன நாயகத்தின் ஒரு பகுதி. தேவையற்ற பாதையில் இந்தகருத்து வேறுபாடுகள் சென்றால், நாட்டின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும். இதனை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், ஜனநாயகத்தின் நோக்கம் சிதைந்து விடும். கடைசி மனிதனுக்கும் வளர்ச்சியின் பலனை கொண்டுசேர்ப்பதே ஜனநாயகத்தின் நோக்கம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாகவாழ அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது. இதற்குமுன் பிரதமரின் உரையில் பெண்களின் பிரச்சனைகள் குறித்து வந்ததை பார்த்துள்ளீர்களா? ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது அது நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.