உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராம் லீலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், மேலும் லக்னோவில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்து கொண்டு தனது உரையின் தொடக்கத்திலும், பேச்சை முடிக்கும்போதும், “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கம் இட்டார்.
இது ஏதோ பிரதமர் சொல்லக் கூடாததை சொன்னதை போன்று பெரும் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு விட்டது. பத்திரிக்கைகளும், தொலைக் காட்சிகளும் பிரதமர் எப்படி இப்படிச் சொல்லலாம் அச்சச்சோ என்று விவாதத்தையும் நடத்தி குவித்தன. அதில் தந்தி டி.வி. மோடியின் ராமர் கோசம் மனித உரிமையா?, மத அரசியலா? என்ற தலைப்பில் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட கிறிஸ்துதாஸ் காந்தி என்ற ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இது மதச் சார்பற்ற நாடு, ஏன் ராமரை கூட செருப்பால் அடிப்பேன் எனக்கு அந்த உரிமை உண்டு என்ற தொனியில் பேசி இந்துக்களின் மத உணர்வுகளை, அவர்களது சகிப்புத் தன்மையை சோதித்துள்ளர். இது சாதாரண வார்த்தைகளன்று,
அன்று சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க, அவர்களது மத உணர்வுகளை பாதுகாக்க இந்திய அரசியல் சட்டம் தந்த அற்ப்புதமான அம்சங்கள் இன்று எப்படி வீக்கம் பெற்று, வீரியம் பெற்று பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை சிதைக்கும் அளவிற்கு உருப்பெற்றுள்ளது, உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையே இது பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் இந்து மத அடையாளத்தை, தலித் சான்றுகளை துறக்க மறுக்கும் இந்த கிறிஸ்துதாஸ் காந்திகள், எங்கிருந்தோ வரும் ரொட்டி துண்டுகளுக்காக குறைப்பதில், கொஞ்சம் கூடுதலாக தந்தாள் தங்களை தாங்களே செருப்பால் அடித்து கொள்வார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.
இந்து மத அடையாளத்துடன் சுற்றித்திரியும் இவர்களைப் போன்றவர்கள் இவர்கள் மத சித்தாந்தபடியே பாவியாகிரார்கள். ஆனால் மோடியோ அப்படியன்று இந்துவாக பிறந்து ,வளர்ந்து ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கி முழங்கியே முதல்வர், பிரதமர் என்று ஆனவர். அந்தச் சொல் , அந்த வார்த்தை, முழக்கம்தான் மத வாதம், மத அரசியல் என்றால் அது கேட்டச் சொல்லன்றே.
தமிழ்த்தாமரை VM வெங்கடேஷ்
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.