ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே நோட்டுகளைத் திரும்பப் பெற்றோம்

ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே, 1000, 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது என, பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் நட வடிக்கையை திரைப்பட துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருப்பதை பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.  சினிமா பிரபலங்களான கரண் ஜோஹர், ரஜினிகாந்த், அஜய்தேவ்கன், கமல்ஹாசன், நாகார் ஜுனா, ரிதேஷ் தேஷ்முக், சுபாஷ் கய், சித்தார்த் மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளே, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்தநடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும், நேர்மையாக வரிசெலுத்துவோரும் கொண்டாட வேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்தகருத்துக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கும்போது, ‘நாட்டின் நேர்மையான குடிமக்களின் நலனுக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு பிரபலங்களின் வாழ்த்துகளுக்கு ட்விட்டர் மூலம் பதில்அளித்த பிரதமர் மோடி, ‘ஊழல், கருப்பு பணம் ஒழிந்தால்மட்டுமே, வளர்ச்சியில் புதிய உயரங்களை நம்மால் எட்டமுடியும். நாட்டின் முன்னேற்றத்தை மந்தமாக்கும் கருப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்நடவடிக்கை உதவும். வளமான, ஊழலற்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்று கூடி உழைக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...