டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம் செய்யப் பட்டது. பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்திவிட்டு புதிய ரூ.500 நோட்டுக்களை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடுமுழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் நிரப்பிய சிலமணி நேரத்திலேயே பணம் காலியாகிவிடுவதால், காத்திருந்தும் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் புதிய ரூ.500 ரூபாய் நோட்டுகள் நாடுமுழுவதும் அனுப்பட்டு வருகிறது என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியிருந்தார். மேலும் டெல்லி, மும்பை, போபால், உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்றும், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனைதொடர்ந்து டெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 விநியோகிக்கப் பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியிலும் போபாலிலும் பழைய ரூ.500 நோட்டுகளை வங்கியில்செலுத்தி புதிய ரூ.500 நோட்டுகளை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுசெல்கின்றனர். புதிய ரூ.500 நோட்டுகள் விநியோகிப்பதால் பணத்தட்டுப்பாடு ஓரளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.