ஒற்றைவரி பதில்: *இல்லை!*
விளக்கம்:நீங்கள் வங்கியில் உங்களுடைய பணத்தைப் போட்டு வைத்தாலும், பணத்தின் அதிபதி யாரு? நீங்கள்தானே? வங்கி உங்களுடைய ஒரு Money manager மட்டுமே. என்றைக்கு நீங்கள் அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டாலும் கொடுக்க வங்கி கடமைப்பட்டுள்ளது. Bank is liable to return your money to you at any given time. அதனால் அது வங்கியின் Liability.
வங்கி யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அது என்றைக்குமே வங்கிக்குத் திரும்பச் வரவேண்டிய பணம். அதனால் அது வங்கியின் சொத்து. அதாவது Asset.
அப்படியாக வழங்கப்பட்ட கடன்கள் வட்டி ஒழுங்காக ஈட்டித் தரும்வரை மட்டுமே அவை Performing assets. சம்பாதித்து தரும் சொத்து. அதாவது படித்து முடித்து வேலைக்குச் சென்று அப்பாவுக்கு தொடர்ந்து சம்பாதித்துத் தரும் திறமையான ஒரு பிள்ளையைப் போன்ற Loan.
ஆகவே, ஒரு வங்கியின் லாப நஷ்டத்தைக் கணக்கிட Balance sheetல் Aseets & Liabilities காட்டப்படுவன. For eg. 10 ரூபாய் Deposit பெறப்பட்டால் அது Liability. அதில் 8 ரூபாய் வட்டிக்கு விட்டவகையில் வட்டியோடு சேர்த்து 8.80 ரூபாய் Asset, கையிருப்பு 2.00 ரூபாயோடு சேர்த்துப் பார்த்தால் வங்கி லாபத்தில் போகிறது என்று அர்த்தம்.
அப்படியல்லாமல் வட்டிகூட கட்டப்படாத கடன்களை தொடந்து Balace sheet களில் Aseet (வங்கியின் சொத்து) என்று காலங்காலமாகக் காட்டிக் கொண்டிருக்க முடியாது.
வட்டிகூட வராத கடன்களை NPA (NON PERFORMING ASSET) என்று இனங்கண்டு Balance sheet ல் இருந்து தூக்க வேண்டும். அதாவது சம்பாதிக்காத பிள்ளையை தண்டச்சோறு என்று அழைப்பதுபோல.
அப்போதுதான் உண்மையான லாப நஷ்ட கணக்குப் பார்க்க முடியும். வராக்கடன் என்று இனங்காணப்படும் ஒரு நிலைதான் Write off.
Write off என்றால் வராக்கடன் என்று அர்த்தம். தள்ளுபடி (WAIVER) என்று அர்த்தம் கிடையாது.
NPA என்று WRITE OFF செய்யப்பட்ட கடன் அதன்பிறகு, RECOVERY TEAM க்கு அனுப்பப்பட்டு கடனை மீட்டெடுக்க அனைத்து வழிகளும் கடைபிடிக்கப்படும்.
ஆகவே WRITE OFF வேறு WAIVER வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தேவையற்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
அறிவுரை: Bank நடைமுறை தெரியாதோர் தயவு செய்து வதந்திகள் பரப்புவதை தவிர்க்கவும். யாராவது எதாவது சொன்னால் அதை உண்மை என்று நம்புமுன், அத்தகவலை அடுத்தவர்க்கு கடத்து முன் தயவுசெய்து உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்!
இருக்கவே இருக்கு Internet. அதில் தேடுங்கள். Authenticated websiteல் சென்று உண்மையை அறியுங்கள்.
அந்த விபரம் தங்களுக்கு இல்லையென்றால், தெரிந்தவர்களிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
மக்களுக்கு சரியான தகவலை சொல்லக் கடமைப்பட்டுள்ள பத்திரிக்கைககளே, மல்லையாவின் கடன் தள்ளுபடி என்று எழுதும்போது, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
கண்டதைத் தின்று, கண்ட இடமேல்லாம் கக்கும் நாயைப்போல் வதந்திகளைப் பரப்ப Mediaக்கள் துனிந்துவிட்டன.
நீங்கள் ஆதரிக்கும் விஷயங்களை மட்டும் Forward செய்யுங்கள். அதற்குமுன் வள்ளுவர் அறிவுறுத்தியது போல 'தேர்ந்து தெளிவு பெறுங்கள்' நீங்களும் குழம்பி குட்டையைக் குழப்பாதீர்கள். அதனால் யாருக்கும் பயன் இல்லை.
அத்துடன்
☝🏼அவர் வங்கி கடன் பெற்ற ஆண்டு..!
☝🏼கடனுக்கு ஈடாக பெறப்பட்ட சொத்து விவரம்..!
☝🏼அப்போதைய பிரதமர், நிதியமைச்சர் பற்றிய விவரங்களையும் சேர்த்து தெரிந்தது கொள்ளுங்கள்..!
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.