மம்தாவின் இன்னொரு முகம்

மம்தா பேனர்ஜி இந்த கருப்பு பண ஒழிப்பை மிக தீவிரமாக எதிர்ப்பதன் உண்மையான நோக்கம் என்ன?

மம்தா பேனர்ஜி'யின் மிக பெரிய வாக்கு வங்கி மேற்கு வங்காளத்தில் உள்ள சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேசிகள் தான்.

இதைத் தவிர பூட்டான், நேபாள் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தயார் செய்து கொடுத்தவர்கள் வேறு யாரும் கிடையாது. சாட்சாத் இந்த திரிணாமூல் காங்கிரஸ் அடியாட்கள் தான்.

இந்த சட்டவிரோத குடியேறிகளால் வங்கி கணக்கை திறக்க முடியவில்லை. காரணம் RBI கேட்ட அடையாள அட்டைகளை இவர்களால் தயாரிக்க முடியவில்லை. இவர்கள் இந்த நாட்டுக்குள் இருப்பதே சட்டவிரோதம், இதில் எங்கிருந்து இவர்களால் வங்கி கணக்கை திறக்க முடியும்?

இந்த கருப்பு பணம் வேட்டையில், 500 மற்றும் 1000 ருபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமானவர்கள்.

1 கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள்.
2 வரி ஏய்ப்பு செய்தவர்கள்.
3 சட்டவிரோதமாக குடியேறிவர்கள்.

இதில் மூன்றாவது உள்ளவர்கள் தான் மம்தா பேனர்ஜி'யின் கண்ணின் மணிகள், காரணம் அவர்களின் வோட்டு. அவர்களை காப்பாற்ற தான் அம்மணி கூரை ஏறி கூப்பாடு போடுது. இது முழுக்க முழுக்க மம்தா பேனர்ஜி'யின் தனி மனித ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கருப்பு பணம் வைத்து இருப்போரை காப்பாற்றவும் செய்யப்படும் கேவலமான முயற்சியே ஆகும்.

மம்தா பேனர்ஜி டில்லி வரை வந்தது போராட்டம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. கல்கத்தாவிலேயே போராட்டம் செய்து இருக்கலாம். டில்லியில் மீடியா கவரேஜ் வேண்டும், அதன் மூலம் மத்திய அரசை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்று ஒரு கேவலமான திட்டம் தான் இது.

மம்தா பேனர்ஜி'யின் கேடுகெட்ட திட்டத்தின் பின் உள்ள கேவலமான எண்ணத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு இந்தியனும் மிக தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் இந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்கள் இந்த பண வாபஸ் அறிவிப்பினால் 100'க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக பொய் பரப்புவது மட்டும் அல்லாமல், படிக்காத பாமர மக்களிடம் சென்று, தாங்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும், அப்படி எடுத்தால் கையில் மை வைப்பாரகள் என்றும் புரளிகளை கிளப்பி அப்பாவிகளை அலைக் கழிக்கிறார்கள்.

இவை அனைத்தும் வடிக்கட்டிய பொய். வங்கி கணக்கு இல்லாமல், பழைய பணத்தை மாற்றுவோர்க்கு மட்டும் தான் மை வைக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இங்கும் மம்தா பேனர்ஜி ஒப்பாரி வைப்பது இதற்கு தான். சாரதா சிட்பண்ட் மோசடியில் கிடைத்த அத்துணை கருப்பு பணத்தையும் இந்த சட்டவிரோதமாக குடியேறியர்வர்களிடம் அளித்து வங்கியில் மாற்றி விட முயற்சி செய்து அதில் பாதி வெற்றியும் பெற்று விட்டார். மத்திய அரசு எப்பொழுது அதற்கும் தடை போட்டதோ, ஓலம் ஒப்பாரி எல்லாம் ஆரம்பித்து விட்டது.

சட்டத்தை மதித்து, இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு அளித்து, நேர்மையாக வரி செலுத்தி, நாட்டுப் பற்றுடன் வாழும் எந்த இந்தியனும் இது போல கேடுகெட்ட அரசியல் வாதிகளின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டான்.

இப்படி எந்த மிரட்டலுக்கு பயப்படாமல் பிரதமர் வெகு நேர்த்தியாக தன் குறிகோளான கருப்பு பண ஒழிப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

இதை பொறுக்க முடியாமல், வருகிற 28ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது இருக்கிறது ஊழல் பெருச்சாளிகள் கூட்டமும், அதற்கு ஒத்து ஊதும் ஒரு சில ஊழல் வியாபார கூட்டமும். கவலை படாதீர்கள். இந்த போராட்டமும் நீர்த்து போக செய்வோம்.

இதை நீங்கள் படிப்பதுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இதை அனைவரும் அறிந்து கொள்வது நாட்டுக்கு நலம்.

ஜெய்ஹிந்த்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...