கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?கார்கேவுக்கு நட்டா கடிதம்

“ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம்.” – நட்டா

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நான்கு நாள்களாக பெரும் விவாதப்பொருளாகவும், தி.மு.க ஆட்சி நிர்வாகத்தின்மீது கேள்வியெழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. தற்போதுவரை பலிஎண்ணிக்கை 57-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், தி.மு.க அரசை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகிறது.

அந்த கடிதத்தில், “கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் தி.மு.க-இந்தியகூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம். இது தொடர்பான ஊடக மற்றும் விசாரணை அறிக்கைகள், இந்த சட்டவிரோத மதுபானவணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வளவு நடந்தபிறகும் உங்கள் (கார்கே) தலைமையிலான காங்கிரஸ் இதில் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில், பாஜக உட்பட ஒட்டுமொத்த நாடும், தி.மு.க-இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு அரசை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல அழுத்தம் தரவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை உறுதி செய்யவும் உங்களை வலியுறுத்துகிறது.

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அல்லது குறைந்தபட்சம் இதில் அவர்களை குரல்கொடுக்கவாவது சொல்லுங்கள். அதோடு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன், அரசின் இந்த பேரழிவுக்கு எதிராகக் கருப்பு பட்டை போராட்டத்தில் எங்கள் தலைவர்களுடன் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று நட்டா தெரிவித்திருக்கிறார்.

Also Read

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...