பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அவரது ரூபாய் நோட்டு அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார். இதுஒரு துணிச்சலான முடிவு என்றும் பாராட்டியுள்ளார்.
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்ததற்கு நாட்டின் பல்வேறுகட்சியினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்தநடவடிக்கை, துணிச்சலான முடிவு என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உரியமாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் சாதாரண பொது மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இவ்விவகாரத்தில் எதிர் மறையான தன்மைகளை மட்டுமே பார்க்கின்றனர் என்றும் ஆனால், தான் இதில்உள்ள நேர்மறையான தன்மைகளையும் கவனிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பீகாரில், லல்லு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகாகூட்டணி அமைத்து ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள நிதிஷ்குமார், அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பாரதியஜனதா தலைமையிலான அரசின் நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்த்துவந்தார். இந்நிலையில், பிரதமரின் ரூபாய் நோட்டு அறிவிப்பை வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.