ரூ.5 ஆயிரம் உச்ச வரம்பு நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்துசெய்தது

ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட்செய்வதற்கு விதித்த நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்துசெய்தது.

கருப்புபணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 19-ந் தேதி ரிசர்வ் வங்கி பல புதிய நிபந்தனைகளை விதித்தது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்குள் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய முடியும். அப்போது வங்கி அதிகாரிகள் இருவர் ஏன் இதுவரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட்செய்யவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்க வேண்டும்.

அதேபோல் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை அடுத்தடுத்த நாட்களில் செலுத்தினால் அந்ததொகை ஒட்டு மொத்தமாக ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனைவிதித்தது.

வங்கியில் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய வாடிக்கையாளர்களுக்கும்(கே.ஒய்.சி.) இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30-ந்தேதிவரை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண்ஜெட்லி ஆகியோரின் உறுதிமொழியை ரிசர்வ் வங்கி மீறலாமா? என்ற கேள்வியும் எழுந்தது.

பல முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக வங்கிகளில் பழையரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக செலுத்தியவர்கள்  தங்களுடைய அதிருப்தியை வங்கி அதிகாரிகளிடம் பதிவுசெய்தனர்.

குறிப்பாக வங்கியின் கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ரிசர்வ்வங்கியின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்புதெவித்தனர். இதை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு வங்கி அதிகாரிகள் கொண்டுசென்றனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நிதி மந்திரி அருண் ஜெட்லி “ஒரு முறை டெபாசிட் ஆக ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய்நோட்டுகளை வங்கியில் செலுத்தினால் அதுபற்றி வங்கிஅதிகாரிகள் கேள்வி எதுவும் எழுப்பி தொந்தரவுதரமாட்டார்கள். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதியசுற்றறிக்கையை வெளியிடும்” என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் தொடர்பான முந்தைய நிபந்தனையை ரத்துசெய்து புதிய அறிவிக்கை ஒன்றை நேற்றுவெளியிட்டது.

அதில், “ரிசர்வ் வங்கியின் மறு ஆய்வு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வங்கியின் முழுமையான கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ஒரேதடவையில் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அல்லது பல முறை இந்த தொகைக்கு அதிகமாகவும் செல்லாத என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். இப்படி பணம்செலுத்தும்போது வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எந்த கேள்வியும் எழுப்பமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...