பள்ளி, கல்லூரி படித்து முடித்து சராசரி வாழ்க்கையை பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நமக்கு பிடித்த ஆசிரியர் யார் என கேட்டால் நம்மிடம் கண்டிப்பு காட்டிய ஆசிரியர் நம் கண் முன்னே வந்து செல்வார். அவர் கூறிய அறிவுரையெல்லாம் நமது நன்மைக்காக தான் என்பது புரியும்.
இதைப் போலவே சாலை விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்போது கிடைக்கும் அவப்பெயர் கொஞ்ச நஞ்சமல்ல.
இருப்பினும் பணிநிமித்தம் அவற்றை தொடர்ந்து மேற்கொள்ளும் காவல்துறையினர் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு நாள் யாரேனும் ஒருவருக்கு நமது செயல் உதவும் என்ற நம்பிக்கை மட்டுமே.
2016 ம் ஆண்டில் மட்டும் கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2 லட்சத்து 35 ஆயிரம் (2,35,155). இவர்கள் அனைவரும் காவல்துறை மீது வருத்தம் அமைந்திருப்பர். ஆனால் தான் உயிரோடிருக்க காரணமே.
காவல்துறையின் கட்டாய ஹெல்மட் திட்டமே என்றுகூறி, மாநகர காவல்துறை ஆணையரே கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றியதாக எல்ஐசி முகவர் முருகேசன் எழுதிய ஒரு கடிதம் கோவை மாநகர காவல்துறையினர் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.
நம்புங்கள். கடமையை செய்தால் கடவுளாகலாம்.
உங்களாலும் கடவுளாக முடியும். உங்கள் உறவினர்களை நண்பர்களை தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய கட்டாயப்படுத்துங்கள்.
என்றும் அன்புடன்Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.