அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் மூக்கை நுழைக்கலாமா? சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா? அதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம்?.
என்ற கேள்விகள் சரியா?
யாரை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்பது அதிமுக வின் உரிமை.ஆனால் அப்படி ஆனவர் அல்லது ஆக்கப்பட்டவர் யார் என்பதை விமர்சிப்பது யாருக்கும் உரிமை உண்டு.
அந்த வகையில் பொது தளத்துக்கு ஒருவர் வந்த பிறகு, அது பற்றி கருத்து சொல்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்பதாலேயே இந்த பதிவு.
உலக வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு கட்சியின் பொதுக்குழு தீர்மானம் போட்டு, அந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாத ஒருவரை, வருந்தி, கஷ்ட்டப்பட்டு, பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என நிர்பந்தித்து, ( ஆம்1 அப்படித்தான் தீர்மானம் சொல்கிறது)…அதாவது “நீங்கள் வந்து தலைமை ஏற்கவேண்டும்”என பிரார்த்தித்து, அனைத்து பிரதிநிதிகளும் தீர்மான பிரதியை எடுத்துக்கொண்டிபோய், கட்டயப்படுத்தி, காலில் விழுந்து, கும்பிட்டு , மன்றாடி கேட்டுக்கொண்டு, அதற்காக மனமிறங்கி மான்புமிகு “சின்னம்மாவை”. இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கி மகிழ்ந்துள்ளனர்.
சீத்தாரம் கெசரியை, சட்டத்திற்கு புறம்பாக, அவர் இயற்கை உபாதை கழிக்க வேளியே சென்றபோது, தலைவர்
பதவியிலிருந்து நீக்கி, அதே கூட்டத்தில், “வெளிநாட்டு மருமகளை”, கட்சியின் தலைவார்க்கியது காங்கிரஸ் கட்சி.
கட்சியில் தகுதியான பலர் இருந்த போதும், நேரு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அதற்கு தகுதி இல்லை என காங்கிரச் கட்சி முடிவு செய்து, சோனியா கந்தியை, காங்கிரஸ் தலைவர் ஆக்கியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாய், எந்த தியாகமும் செய்யாத “ஜெ” உற்ற தோழி என்கிற மிகப்பெரிய தியாகத்திற்காக மட்டுமே, சசியை பொதுச்செயலாளர் ஆக்கியதை, அதிமுக தொண்டர் உள்ளிட்ட தமிழக மக்கள் “கசப்பாககவே” கருதுகின்றனர்.
இந்தவகையில் அதிமுகவின் வளர்ச்சிக்கு சசியின் தியாகம் என்ன என்ற திமுகவினரின் கேள்வியில், நியாயம் இல்லாமல் இல்லை.
“சசி” எத்தனை கிளைகளை உருவாக்கினார்?,எத்தனை உறுப்பினர்களை சேர்த்தார்?, எத்த்னை போராட்டங்களில் கலந்து கொண்டார்? ஊழல் வழக்குகள் தவிர, கட்சியின் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்?.,என்ற சசி எதிர்ப்பாளர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
36, ஆண்டுகள் அவர் “அம்மாவோடு” இருந்தார்…அம்மாவிற்கு மூளையாக செயல் பட்டார்..அம்மவின் இன்ப துன்பங்களில் அவர் பங்கு கொண்டார்…கட்சியின் ஒவ்வொரு அசைவிலும்,அம்மாவோடு சசியின் முடிவுகளும் இருந்தன..என்ற “பொன்னையனின் வாதம், சசி தேர்வுக்கு பலம் சேர்ப்பதாக இல்லை.
இது ஒரு வாதமாக வைக்கப்பட்டால், கலைஞர் கருணாநிதியின் நிழலாக இருக்கும், “சண்முகநாதனுக்குத்தான்”, அடுத்த திமுக தலைவருக்கான தகுதி இருக்கிறது என்ற பத்திக்கை செய்திகளின் வாதமும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கும்.
“ஜெ” என்கிற அதிமுக தலைவரின் பின்னணியில், “சசி” இருந்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படியாயின் எந்த கட்சியிலும் இல்லாத “திடீர் நீக்கம்”, “திடிர் சேர்க்கை”, “திடிற் பதவி உயர்வுகள்”, சசியின் அறிவுருத்தலால்தான் நடை பெற்று இருக்க முடியும் என்று நம்ப வேண்டியிருக்கிறது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.வீ.சேகரின் கூற்றுப்படி, யாரும் தன் காலி விழுவதை “ஜெ” விரும்பியதில்லை, என்பது உண்மையானால், “ஜெ” காலில் விழவைக்கும் கலாச்சாரத்தை, உருவாக்கியது “சசிதான்” என்பது உறுதியாகிறது.
காரணம் “ஜெ” மரைவுக்குப்பிறகு, “மறந்து பொயிருக்க வேண்டிய “ “காலில் விழும் கலாச்சாரத்தை”, “சசி” மீண்டும் தொடர்வதன் மர்மம் என்ன?
“ஜெ”, அளவுக்கு “சசி” என்ன அப்படிப்பட்ட பெரிய தலைவரா? என்ற கேள்விகளும் பொது தளத்தில் கேட்கப்படுகிறது.
பொதுக்குழு தீர்மானத்தை “ஜெ”-எம்ஜியார், சமாதிகளில் வைத்து கண்ணீர்மல்கி “சசி” அதை ஏற்றுக்கொண்டது, 2012 ஆம் ஆண்டு “ஜெ” சசியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி, அதற்கு பிறகு சேர்த்துக்கொண்டபோது “சசி” எழுதிய மன்னிப்பு கடிதத்தில், “நான் இனி எந்த எம்.எ.ஏ, எம்.பி, மந்திரி பதிவிகளை ஏற்றுக்கொள்ளவோ ஆசைப்படவோ மாட்டேன்..உங்களுக்கு சேவை செய்வதை மட்டுமே என் வாழ்நாள் குறிக்கோளாக கொள்வேன் “ என்று எழுதிக்கொடுத்தது, உண்மை அல்ல என்பதற்கு சான்று என்றும், சசியோடு கட்சியிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியே அனுப்பப்பட்ட “மன்னார்குடி” குடும்பத்தர் அனைவரும், “ஜெ” இறந்ததும் அவரது உடலருகே நின்றதுமா “ஜெ” க்கு காட்டும் விசுவாசம் என்றும், “ஜெ” யின் மனசாட்சியாக இருந்த பல அமைச்சர்களும், எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் “ஜெ” பூத உடலருகே நெருங்கக்கூட அனுமதிக்க வில்லை என்றும் “புலம்பும்” உண்மை அதிமுக விசுவாசிகள்க்கு “சசியி” பதில் என்ன?
மறைந்த எம்.ஜி.யாரின் நெருங்கிய நண்பரும், பறைந்த எம்.பி.யுமான வலம்புரி ஜான் அவர்கள் 29 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றை “தினமலர்” நாளிதழ் பிரசுரித்துள்ளது.
அதில் “சசிகலா” எம்.ஜி.யாரி ஆளுமல்ல..”ஜெ” யின் ஆளுமல்ல..சசிகலா…சசிகாலாவின் ஆள்..அவர் தனக்கு மட்டுமே விசுவாசமானவர்..என்று கூறியதை இன்றைய நிகழ்வுகள் உண்மையாக்கிவிட்டது என்பது அதிமுக அடிமட்ட தொண்டனின் குரலாக இருக்கிறது.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் செய்திகளை தினமலர் நாளிதழ் இன்று வெளியிட்டு இருக்கிறது.
மிசார வாரியத்தின் பலகோடி ரூபாய் டெண்டருக்கு சசியின் மன்னார்குடி குடும்பத்தார் போட்டிபோடுகின்றனர் என்பது சசியின் தலைமையில் அடுத்த4 ஆண்டுகளை தமிழ்நாடு எப்படி கடத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து பலதியாகங்களை செய்த தகுதிவாய்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை,பன்னீர்செல்வம் , போன்ற மூத்த தலைவர்கள், பதவிக்காவும் பயத்தினாலும் சசியின் காலடியில் சரணடைந்ததை எந்த தொண்டனாலையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது உள்கட்சி புகைச்சலில் இருந்து புரிகிறது.
அதெல்லாம் சரி, இதுவரை “ரிமோட் கண்ட்ரோலாக” மட்டுமே இருந்த சசியால், நேரடி அர்சியலில் பிரகாசிக்கமுடியுமா? ஆட்சியில் , நேரடி நிர்வாகத்தில், அனுபவம் இல்லத சசியால், முதலமைச்சர் பொறுப்பை (விரைவில் அப்படி ஒரு செய்தி வருமாம்)..ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்யமுடியுமா>.என்பது அர்சியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
வருமானத்திற்கதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் சசியின் தலைமேல் “கத்தி” தொங்கிக்கொண்டிருக்கிறது..தீர்ப்பு எப்போதும் வரலாம் என்றும்..அதில் தண்டனை உறுதி என்றும், சட்டவல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.யார் உருவாக்கிய அதிமுக என்னும் மாபெரும் இயக்கம், பல “காண்ட்ரவர்சிகள்” உள்ளடக்கிய சசிகலாவை, தன் பொதுச்செயலாளர் ஆக்கி, இன்னும் சிலவாரங்களில் முதலமைச்சராக முடி சூட்டி,தமிழகத்தை எந்த பாதையில் அழைத்துச்செல்லப்போகிரது ?
இன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக ஆளத்தகுதி பெற்ற அவ்வியக்கம், தற்போது செய்திருக்கும் “குளறுபடிகளால்” மீதமுள்ள ஆட்சியை இழந்து, திமுகவிற்கு இடங்கொடுத்து விடக்கூடாது, என்கிற கவலையும் அச்சமும், தமிநாட்டு மக்களிடம் நிலவுகிறது.
இந்தகவலைகள் உண்மையாகுமா? அல்லது ஏதாவது “அதிசயம் ‘ நிகழுமா?
காலந்தான் பதில் சொல்லும்..
நன்றி எஸ்.ஆர்.சேகர்
பாஜக மாநில பொருளாளர்
Leave a Reply
You must be logged in to post a comment.