500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கை கருப்புப்பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரான போரின் தொடக்கம்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: – பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுகிறார். சுதந்திரத்துக்குப்பிறகு எந்தப் பிரதமரும் கருப்புப்பணத்துக்கு எதிராக போர் நடத்தியதில்லை.
பண மதிப்பு ரத்து என்பது கருப்புப் பணத்துக்கு எதிரான முதல்நடவடிக்கை. அனைத்து ரொக்கமும் வங்கிகளுக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் அவர் பேட்டியளித்தபோது தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தமிழகஅரசின் உள்விவகாரங்களில் மத்தியஅரசு தலையிடாது. ஓ.பி.எஸ்.முதல்வரானதில் மத்திய அரசின் தலையீடில்லை. பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கருத்துகூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.