தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் நிர்வாகிகள் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகைக்கு சென்று அங்கே நேரிடையாக விவசாயிகளின் நிலங்கள், வீடுகளுக்கு சென்றுபார்த்தேன். அவர்கள் மிகுந்த மனவேதனையுடன் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு, பாஜ சார்பில் நகல் எடுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளேன். விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க முயற்சிசெய்வேன் என்று உறுதி அளித்துள்ளார். விவசாயிகளை நேரில்சென்று பார்த்தபோது, நாம் நினைப்பதை விட மோசமான நிலையில் விவசாயிகள் உள்ளனர் என தெரிகிறது.
இறந்த விவசாயிகள் குடும்பத்தினர் அடுத்த வேளைக்கு உணவுகூட இல்லாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் செலவிட்டதை கணக்கிட்டு அதற்கு மேல் ₹25 ஆயிரம் கூடுதலாக நிவாரணம் தரவேண்டும் என்று விவசாயிகள் கூறினர். இஸ்ரேல் போன்ற நாடுகளில் செயற்கை மழை வரவழைத்து விவசாயிகள் பாதுகாக்கப் படுகிறார்கள். அதுபோன்ற உயர் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தவேண்டும். அவர்களின் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். முக்கியமாக விவசாயிகள் மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு மன ஊக்கம் என்ற கவுன்சலிங் உடனடியாக தேவைப்படுகிறது. அவர்களை மகிழ்விக்க உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதிஅளித்துள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவுடன் விவசாயிகளும் இடம் பெற வேண்டும். மத்திய அரசிடமும் நாங்கள் தனியாக கோரிக்கை வைப்போம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளை காப்பாற்றவேண்டும்.
விவசாயத்தை விட்டு அவர்கள் வேறுதொழிலுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மாநிலத்திடம் இருந்து அதிகாரப் பூர்வ கோரிக்கை வந்தால் மட்டுமே மத்திய அரசு வறட்சிமாநிலமாக அறிவிக்க முடியும் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் குறை, குற்றம்சொல்லி விமர்சிக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான நிதி கிடைக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு உதவவேண்டும்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.