‛‛பொங்கல் பண்டிகை" ஒரு போதும் தேசிய விடுமுறை பட்டியலில் இடம்பெற வில்லை என்றும் இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக. தான் காரணம் என்று மத்திய இணைஅமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில், பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் விடுமுறை நிறத்தப்பட்டுள்ளதாக வெளியானதகவல் தவறானது. மத்திய அரசு ஊழியர்கள் குழு கூடிதான் விடுமுறை முடிவு எடுக்கப்பட்டது. இரண்டாவது சனிக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால் அந்தவிடுமுறையை வேறு நாளில் எடுத்துக் கொள்ளலாம் என விளக்கமளித்தார். மேலும், எந்தெந்த மாநில பண்டிகை உள்ளதோ அங்கு மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர் குழு இதுபோல முடிவு எடுப்பது வழக்கமான ஒன்று தான் என்றார்.
மேலும், கட்டாய விடுமுறை என்பது வருடத்திற்கு 14 நாட்கள்தான் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களின் பண்டிகைகளுக்கு ஏற்ப 12 விடுமுறை நாட்களை மத்திய அரசு ஊழியர்குழு தேர்வு செய்யும் என்றார்.
பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது ஊழியர் நலக்குழு எடுத்தமுடிவு. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டி கையை நீக்கி, முதலில் 2008-இல் அறிவிப்பு வெளியானது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக தான் காரணம். அப்போது இப்பிரச்னை குறித்து யாரும் குரல் எழுப்ப வில்லை. இந்த விஷயத்தில் தமிழர்களுக்கு துரோகம்செய்தது திமுக தான்
இதேபோன்று, 2012-இல் பொங்கலுக்கு கட்டாயவிடுமுறை இல்லை என்ற சூழல் உருவானது. அப்போதும் மத்தியில் ஆட்சியில் இருந்ததது காங்கிரல் மற்றும் திமுக தான். அப்போது தமிழகத்தில் ஆட்சியில்இருந்த அதிமுக கூட இதுகுறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. அதை தடுப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.