தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியார்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கல்பண்டிகையை விருப்ப முறையில் இருந்து பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன் மூலமாகத் தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப் படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தை வறட்சிமாநிலமாக அறிவித்தால் மட்டும்போதாது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை அறிந்து ஆறுகளைத் தூர்வாரி, மணல் அள்ளுவதைத் தடுக்கவேண்டும். மேலும், விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக அவர் விமானநிலையத்தில் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. ஆனால், அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சட்டத் திருத்தம்கொண்டு வந்தாலும் மத்திய அரசால் அனுமதிவாங்க இயலாது.
ஆகவே, ஜல்லிக்கட்டுபோட்டி நடத்த அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும். அவ்வாறு சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பாஜகவும் முழுஒத்துழைப்பு அளிக்கும். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், அதற்கு உணர்வுப் பூர்வமாக ஆதரவு அளிப்போம் என்றார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.