ராஜபாளையத்தில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்புக்கு காத்திருக் கிறோம். தீர்ப்பு எதிராகவந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கும். தமிழக அரசு ஜல்லிக் கட்டுக்கு பதிலாக ஏறு தழுவுதல் என்ற புதியவிழாவை அறிவித்து நடத்த வேண்டும். ஜல்லிக் கட்டுக்கு தான் தடை உள்ளது. ஏறுதழுவுதலுக்கு இல்லை.
எனவே தமிழக அரசு சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி ஏறுதழுவுதலை நடத்தலாம். விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொள்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தைரியமாக இருக்கவேண்டும். விவசாயிகளின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும். மத்திய அரசின் உதய்திட்டத்தில் தமிழகம் சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.