ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினர், பிரதமரைச் சந்திக்கவிரும்பினால், அதற்கு தாம் தொடர்முயற்சி மேற்கொள்வேன் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தவலியுறுத்தி சென்னை மெரினாவில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்ட குழுவினரை சென்னை கமலாலயத்தில் சந்தித்துப் பேசினார் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
இந்தசந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பினால், அதற்கான முயற்சியை தாம் தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே-வை தாமும், தமிழக பாஜக குழுவினரும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.