அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா கோவா மாநிலதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள 5 மாநில தேர்தலிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.
இதில் உத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். அங்கு 3-ல் 2 பங்கு இடங்களைபிடித்து பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் நடைபெறும் குடும்பசண்டையால் மக்கள் அந்தகட்சியை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இனி அவர்களால் மக்களிடம் எடுபடமுடியாது.
உத்தரபிரதேச வரலாற்றில் இது போன்ற மோசமான ஆட்சியை மக்கள் சந்தித்தது இல்லை. மாநிலம் முழுவதும் குண்டர் ராஜ்ஜி யமும், மோசடி பேர்வழிகளின் ராஜ்ஜியமும் நடந்துகொண்டு இருக்கிறது. ஏழைகளின் நிலங்களை எல்லாம் வலுக் கட்டாயமாக பறித்து இருக்கிறார்கள். விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
அரசால் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க முடியவில்லை. அதேநேரத்தில் எல்லா மட்டத்திலும் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே, அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு பாடம்புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். பாரதிய ஜனதாவுக்கு அவர்கள் முழு ஆதரவுகொடுக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.