மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமன் சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை மத்திய அரசு புறக் கணிப்பதாக கூறுவது தவறு. டெல்லிக்கு தமிழகத்தின் முதல்- அமைச்சர் வந்தபோது அவரை பிரதமர் மோடி சந்தித்தார். தம்பித்துரை பாராளுமன்ற துணை சபாநாயகர். அவரை பலமுறை நான் சந்தித்து இருக்கிறேன்.
அவர் ஒருவரை பிரதமர் சந்திக்க முடியாமல் போனதற்கு ஒட்டு மொத்தமாக புறக்கணித்துவிட்டார் என்று சொல்வது துரதிர்ஷ்ட வசமானது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டம் சுப்ரீம்கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. இதனால்தான் மாநில அரசு மூலம் அவசரசட்டம் கொண்டு வர வாய்ப்பு இருப்பது பற்றி தெரிவித்தோம். அப்போது தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியது.
இந்த விஷயத்தில் முன் கூட்டியே முடிவு செய்திருக்கலாமே? காலதாமதத்துக்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? என்றெல்லாம் குறைகண்டு பிடிக்கவேண்டாம். இது எல்லோருக்கும் ஒரு பாடம்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடத்துவதற்கு அனுமதித்தோம் என்று அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒருபக்கம் தடை போட்டுவிட்டு, இன்னொரு பக்கம் சட்டத்தை மீறி ஜல்லிக்கட்டு நடத்துங்கள் என்று சொல்வதுதான் சிறந்தவழிமுறையா? அதையும் சட்டப் படிதான் பாரதிய ஜனதா கட்சி செய்யும்.
காவிரி பிரச்சினையிலும் மத்திய அரசு தவறு செய்து விட்டதாக சொல்வது தவறு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு பாராளுமன்றத்தின் சட்டமாக இயற்றிகொண்டு வருவதுதான் நிரந்தரமானதாக இருக்கும் என்பதால்தான் அந்த முடிவை எடுத்தது. நாங்கள் சட்டத்துக்கு மதிப்புகொடுத்து எதையும் செய்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவி இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு தேசத்தின் கொடியை எடுப்பவர்கள் யார்? பிரதமராக இன்று மோடி இருக்கிறார்.
இதற்கு முன் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். பிரதமரின் படங்களை எரிப்பவர்கள் யார்? எனவே தேச விரோதிகளை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்து இருக்கிறார்கள். போலீசார் தவறுசெய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ்கமிஷனர் அறிவித்துள்ளார்.
விசாரணை நடக்கட்டும். நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். வர்தா புயல், வறட்சி நிவாரணம் உள்பட பலவிஷயங்களில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக பொத்தாம்பொதுவாக கூறக்கூடாது.
புள்ளி விவரமாக தெரிவித்தால் பதில்சொல்ல தயார். எல்லா மாநிலங்களும் முன்னேறினால்தான் இந்தியா முன்னேறும் என்பதுதான் பிரதமர் மோடியின் நம்பிக்கை. இதற்கு எதிராக அவர் ஒரு போதும் செயல்படமாட்டார்.
பணமதிப்பு நீக்கத்தால் தொழில், வர்த்தகத்தில் தாக்கம் இருப்பது உண்மைதான். அது குறிப்பிட்ட காலத்துக்குள் சீராகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.