பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உத்தரப் பிரதேசத்தை ஆட்சிசெய்யும் சமாஜ்வாடி கட்சியில் தற்போது குடும்பநாடகம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டுமக்களை முட்டாளாக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு அகிலேஷ் யாதவ் இந்த தவறை செய்து கொண்டிருக்கிறார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அதன்தாக்கம் பா.ஜ.க.வை வீழ்த்திவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாஜக.வின் செல்வாக்கு நாடு முழுவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு உத்தரப்பிரதேச தேர்தல்முடிவு ஒரு உரைகல்லாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அது சரிஅல்ல.
உத்தரப்பிரதேசத்தில் தற்போது மக்களிடம் பல விதமான அதிருப்திகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் நிறைய கால்நடைகள் களவுபோனது. அது மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது.
பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாததால் நிறையபேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த பிரச்சினைகளை திசை திருப்பவே எதிர்க் கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அதையும் எதிர்கொள்ள பாஜக. தயாராக உள்ளது. ஏனெனில் மக்கள் பா.ஜ.க. பக்கம் தான் உள்ளனர்.
பா.ஜ.க.வின் தாமரை சின்னத்துக்கே மக்கள் வாக்களிப் பார்கள். எனவே உத்தரப்பிரதேச சட்டசபைதேர்தலில் பாரதிய ஜனதா மூன்றில் இரண்டுபங்கு இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும்.
அடித்தட்டு மக்கள் மேன்மைபெற தற்போதைய இட ஒதுக்கீடு முறை அப்படியே நீடிக்கவேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. எனவே இட ஒதுக்கீட்டை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. மத அடிப்படையில் ஒரு போதும் இட ஒதுக்கீடு வராது.
அது போல அயோத்தி ராமர்கோவில் விஷயத்திலும் பாஜக. தெளிவான சிந்தனையுடன் உள்ளது. அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்பதே பாஜக.வின் கொள்கையாகும். ஆனால் சட்ட அறிவிப்புகளுக்கு உட்பட்டே அந்த ஆலயம் அமையவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பொதுவாக பா.ஜ.க. முதல்அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. அதுபோல பா.ஜ.க.வில் வாரிசு ஆட்சியும் இல்லை.
ஆனால் காங்கிரசில் வாரிசுகள் மட்டுமே தலைமை பதவிக்கு வரமுடிகிறது. ராகுல் இப்போதும் குழந்தையாகவே இருப்பதால் காங்கிரஸ் தலைவர் விஷயத்தில் குழப்பம்இல்லாமல் உள்ளது.
அதேசமயத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. ஏனெனில் பா.ஜ.க.வில் வாரிசு அரசியல்இல்லை இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.