உலகெல்லாம் உண்ணாவிரதத்தையும் சத்தியாகிரகத்தையும் உன்னதத் தீர்வாகப் பார்க்கும் போது காந்தி பிறந்த மண்ணில் மட்டும்தான் உண்ணாவிரதத்துகும், சத்தியாகிரகப் போராட்டத்துக்கும் அரசால் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அறவழிப் போராட்டம் அடக்குமுறையால் தடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள். நியாயம் கேட்க அண்ணல் காந்தியின் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் முடக்கப்படுகிறார்கள்.:
"என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் கட்சியினர் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றினாலும், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டேன்' என, ஹசாரே கூறியுள்ளார். இதற்கு மனிஷ் திவாரி பதில் என்ன .உங்கள் அரசு செய்த ஒரு ஊழலால் 120 கோடி மக்களும் அல்லல் படுகிறோம். அண்ணாவின் தவறு ஒன்றும் பெரிதல்ல, காங்கிரஸ் ஒன்றாம் வகுப்பு பிள்ளை போல் நடந்து கொள்வது ஏன்..
ஊழலை ஒழிக்க போராடுபவரின் மீது ஊழல் குற்றம் சாட்டுவது, மக்களை திசை திருப்பும் செயல்… அண்ணாவின் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் பட்சத்தில், பெரும்பாலான காங்கிரஸ் புள்ளிகள் சிறைக்கு செல்ல நேரிடும்… மேலும் இனி சுலபமாக பணம் ஈட்ட முடியாது… அதனாலேயே காங்கிரஸ் புள்ளிகள் ஒன்று சேர்ந்து, அண்ணாவின் லோக்பலை எதிர்கின்றனர்… தற்போதைய சுழல், இந்தியாவை ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியினை நோக்கி ஈட்டு செல்கிறது.
லோக்பாளில் அன்னா ஹசாரே சேர்க்க சொன்ன சரத்துகள் ஏற்புடையனவே அன்றி தவறில்லையே..எதற்க்காக இவர்கள் பயம் கொள்ளவேண்டும்..? கபில் சிபல் போன்ற மேல்தட்டு ஆடை அணியும் பெரும் புள்ளிகளுக்கு ஏழைகளின் துயர் பற்றி என்ன தெரியும்.?ஒரு நாளைக்கு ஓர் லட்ச ரூபாய் வாடகையாய் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து பதவி சுகம் கண்ட கட்சியினர் அல்லவா இந்த காங்கிரசார்..!! அன்னா ஹசாரின் இந்த போராட்டம் வெல்லும் நாட்டிலே ஓர் மாற்றத்தை கொண்டுவரும்..! ஆயிரம் போலீசாரை கொண்டு இந்த அறப்போராட்டத்தை நசுக்க நினைத்தால் நாட்டிலே அமைதி அழியும்..! ஒற்றுமை குறையும்..காங்கிரஸ் இத்தோடு மறையும்..! இறுதியில் அஹிம்சையே வெல்லும்..அன்னா ஹசாரே என்கிற அஹிமசாவாதியால்..!!
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.