உ.பி. முதல்வர் அகிலேஷ், தான்செய்த தவறுகளை மறைக்கும் திறமை படைத்தவர் என்று பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்தார்.
உ.பி.யின் பதாவுன் நகரில் பாஜக சார்பில் சனியன்று பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான்செய்த பணிகள் பேசும் என்று முதல்வர் அகிலேஷ் கூறிவருகிறார். ஆனால், தான்செய்த தவறுகளை மறைக்கும் திறமை படைத்தவர் அகிலேஷ் என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நல்லநாட்கள் வந்தனவா என்று அகிலேஷ் கேட்கிறார். உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளாக இவர்தான் முதல்வராக இருந்தார். நல்லநாட்கள் வரவில்லை என்று மக்கள் கூறினால் அதற்கு அகிலேஷ் தான் பொறுப்பு ஆவார்.
முலாயம் சிங் குடும்பமும் சோனியாகாந்தி குடும்பமும் தங்கள் தோல்விகளை மறைக்கவே உ.பி.யில் இணைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியை பொதுவுடைமை தலைவர் ராம்மனோகர் லோகியா எதிர்த்தார். அவரது கொள்கைகளை பின் பற்றும் சீடர்கள் காங்கிரஸுடன் கைகோர்த்து ள்ளனர். நீங்கள் யாருடன் கைகோர்த்தாலும் எனக்கு கவலை யில்லை. ஆனால் மக்களுக்கு என்னசெய்தீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உ.பி.யில் 5 ஆண்டு ஆட்சி செய்தவர்கள் தங்கள் சாதனைகளை ஏன் கூறவில்லை? அவர்கள் எங்குசென்றாலும் ஒரே விஷயத்தையே சொல்கின்றனர். மோடி என்னசொன்னார், என்ன செய்தார் என்று கேளுங்கள் என்கின்றனர். இதை வரும் 2019 தேர்தலில் மக்கள் தீர்மானித்து கொள்வார்கள். மக்களுக்கு நீங்கள் என்னசெய்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்.
முந்தைய மாயாவதி அரசு ஊழல்அரசு என்றும் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவேன் என்று அகிலேஷ் கூறினார். அவ்வாறு செய்தாரா?
2 – 3 மாத நாடகத்துக்குபிறகு மாயாவதிக்கு நெருக்கமான மற்றும் கடும்ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளுக்கு முக்கியப்பதவிகளை அகிலேஷ் கொடுத்தார். ஊழலுக்கான கதவுகளை மேலும் திறந்துவைத்தார். எந்தப்பிரச்சினையிலும் ஒன்றுசேராத மாயாவதியும் முலாயம்சிங்கும் நான் கறுப்புப்பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது ஒன்று சேர்ந்தனர். இதனால் தங்களுக்கு சரிவு ஏற்படுவதை கண்டு அவர்கள் எனக்கு எதிராகதிரும்பினர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.