''எம்எல்ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னையில், கவர்னர் வித்யாசாகர்ராவ் பொறுமையாக செயல்பட்டார்; இதைவிட வேறுயாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக, திமுக.,வும், அதிமுக.,வும் தமிழகத்தை ஆட்சிசெய்து அழித்துவிட்டன. புதியதேடலில் மக்கள் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில், முதல்வராக யார்வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அதுதான். எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்தது தமிழகத்திற்கு கேவலம். சட்டத்தை இயற்றக்கூடிய, எம்.எல்.ஏ.,க்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் மீதமுள்ள நான்கரை ஆண்டுகாலமும் ஆட்சி தொடரவேண்டும். அந்த கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற போட்டி நடக்கிறது. மக்கள், அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.