தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். அதன்படி முதல் மாவட்டமாக நேற்று அவர் ஈரோடு வந்தார்.
ஈரோடு தெற்குமாவட்ட ஊழியர் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசியவர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சிநிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு பயணத்தை தொடங்கி இருக்கிறேன். இந்தசந்திப்புக்கு முக்கியத்துவம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் இருதுருவ அரசியலை விட்டு தமிழக மக்களை மீட்டுக் கொண்டு வரவேண்டும்.
திமுக., அதிமுக. 2 கட்சிகளும் ஊழல்கட்சிகள். இந்த கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. திராவிட கட்சிகள் இல்லாத மாற்று அரசியலை ஏற்படுத்தவேண்டும் என்ற மக்கள் சக்தியை உருவாக்குவதே பா.ஜனதாவின் நோக்கம்.
ஊழல் கறை படியாமல் ஆட்சிக்குவந்த ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நட்பினால் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி, இறப்புக்கு பின்னரும் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு உள்ளார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் உடன் இருந்து ஊழலுக்கு துணைநின்றவர் சசிகலா. இவர்களின் ஊழல் பற்றி நீதிபதிகளே கண்டிக்கும் அளவுக்கு உள்ளது.
நீதி மன்றம் தற்போது வழங்கி உள்ள தீர்ப்பு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைந்துள்ள நல்ல தீர்ப்பு. நல்லவர்கள், நேர்மையானவர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை உருவாக்கும்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவேண்டும். அப்படி ஒரு ஆட்சி அமையவில்லை என்றால் தேர்தலை சந்திப்பது நல்லது. உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்தவேண்டும்.
தற்போதைய பரபரப்பில் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து அரசு விலகி உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூவத்தூரில் போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். இப்போதைய நிலையில் சட்டமன்றத்தில் வாக்கெடுப்புக்கு அறிவிப்பு வந்தாலும், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் பேசி, அந்த கருத்துடன் வந்து வாக்களிக்க செய்ய வேண்டும்.
தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், உள்துறை விவகாரங்களில் அனுபவம் உள்ளவர். எனவேதான் அத்தனை பரபரப்பு மிக்க நேரத்திலும் நிதானமாக நடவடிக்கை எடுத்தார். அதுபோல் இனி வரும் காலங்களிலும் நிதானமாக சரியான முடிவினை எடுப்பார்.
முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல் ஆட்சிரீதியாக பா.ஜனதா கட்சி உதவி செய்யும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.