""உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் வகையில் அமையும்'' என பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கோரக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பது பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டு விடும் (நேரு குடும்பத்தை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). ஆனால், பாஜகவில் அத்தகுநிலை இல்லை.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவானது பரம்பரை அரசியலுக்கும், ஜாதிரீதியிலான அரசியலுக்கும் முடிவுகட்டுவதாக அமையும்.உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது கோவா, உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கடைசி நேரத்தில்தான் கூட்டணி அமைத்தன. பொதுவாக, இரண்டு அரசியல் கட்சிகளிடையே கொள்கைகளின் அடிப்படையில்தான் கூட்டணி அமையும்.
ஆனால் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அமைத்துள்ளது கொள்கையற்ற கூட்டணியாகும். இது, இரு ஊழல் குடும்பங்களுக்கு இடையே அமைந்த கூட்டணிபோல் தெரிகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால், அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டார். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் – ஒழுங்குநிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குற்றங்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அகிலேஷ் யாதவின் ஆட்சியில் ஏழை எளியமக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர் என்றார் அமித் ஷா.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.