பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

மணிப்பூர் மாநில சட்ட சபை தேர்தல் அடுத்தமாதம் (மார்ச்) 4 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது.  இந்தபிரசார கூட்டம் நடக்கிறது.இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மணிப்பூர் மாநிலம் தற்போது அழிந்துவருகிறது. இதற்கு யார் காரணம்? மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்துவருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக்காண முடிகிறதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?

பொதுமக்களாகிய நீங்கள் இந்தத்தேர்தலில் பாஜக கட்சியை தேர்ந்தெடுத்தால், பாஜக உங்களுக்கு சேவைசெய்யும். காங்கிரஸ் கட்சிக்கு 15 வருடங்களைக் கொடுத்த நீங்கள், எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகளைக்கொடுங்கள். அவர்கள் 15 வருடங்களில் செய்யாததை நாங்கள் 15 மாதங்களில் செய்து காட்டுவோம்.

விவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் முதியவர்களுக்கு மருந்துகள் ஆகியவற்றை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.

இன்று எங்கு காங்கிரஸ் ஆட்சி நடை பெறுகிறதோ, அங்கு முன்னேற்றம் என்பது இல்லை. ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறிவருகின்றன".

இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...