ஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கூட்டம் கோவையில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
எட்டிமடையில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. ஆர்எஸ்எஸ். அகில இந்திய தலைவர் மோகன்பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி, ஆகியோர் வருகிற 19-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் விசுவ இந்துபரிஷத், அகில பாரத வித்யார்த்தி பரிஷத், பி.எம்.எஸ். வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பாரதிய கிசான்சங் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்.
21-ந்தேதி நடைபெறும் நிறைவுவிழாவில் பாரதிய ஜனதா அகில இந்தியதலைவர் அமித்ஷா, மத்தியமந்திரி நிதின் கட்கரி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். மாநில இணை செய்தி தொடர்பாளர் சூரிய நாராயணன் கூறியதாவது:-
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். தேசியபொதுக்குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடக்க இருப்பது இதுவே முதல்முறை ஆகும். கோவை எட்டிமடையில் நடைபெறும் கூட்டத்தில் நாடுமுழுவதும் இருந்து 1500 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தேசிய மற்றும் சமுதாய பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் படும் என்றார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.