பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி

 பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போதைய சட்டமன்ற  தேர்தலைச் சந்தித்தது..

மாநில சட்டசபையின் மொத்தமுள்ள 403 தொகுதியில் போட்டியிட்ட பாஜக அதிக இடங்களைப்பிடிக்கும் எனவும், தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும் இருவகையான தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம்  வெளியாயின.

ஆனால்  இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய திலிருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.காலை 103.0 மணி நிலவரப்படி தெளிவாக முன்னணிநிலவரம் தெரிந்துள்ள 379 தொகுதிகளில் 274 தொகுதிகளில் பாஜக முன்னிலைபெற்றுள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி 75 இடங்களில் முன்னணியில் உள்ளது. மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியானது 30 இடங்களில் மட்டுமே முன்னணி பெற்றுள்ளது. இதன் காரணமாக பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலையிலேயே அவர்கள் பாஜக அலுவலகங்களில் கூடி இனிப்புகள் வழங்கத்தொடங்கினர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. இது மிகப் பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...