மணிப்பூரில் மாநிலத்தில் 8 பேர்கொண்ட அமைச்சரவை குழுவுடன் புதியமுதல்வராக பாஜக தலைவர் என்.பிரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்தமாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது இதுவே முதல் முறையாகும்.
இம்பாலில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரேன்சிங்குக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக நாகாலாந்து மக்கள்கட்சியின் ஓய்.ஜாய்குமார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் பாஜகவின் பிஸ்வைத் சிங், நாகாமக்கள் கட்சியின் எல்.ஜெயந்தகுமார் சிங், எல்.ஹாவ்கிப், என்.காயசி, லோக் ஜனசக்தியின் கரம் ஷியாம், நாகா மக்கள் முன்னணியின் எல்.திக்கோ, காங்கிரஸ் எம்எல்ஏ ஷ்யாம் குமார் (பாஜக ஆதரவு) ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், அசாம் அமைச்சர் ஹிமந்தபிஸ்வா சர்மா, முன்னாள் முதல்வர் இபோபி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரேன் சிங் பதவியேற்பு விழாவில் பங்கேற் பதற்காக பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இருவரும் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர். நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. இதனால் அவர்களால் பதவியேற்புவிழாவில் பங்கேற்க முடியவில்லை.
பிரேன் சிங்குக்கு கால்பந்து என்றால் மிகவும்பிடிக்கும். அந்த விளையாட்டுதான் அவரை எல்லை பாதுகாப்புப் படைவீரராக உருவாக்கியது. அந்தப் பணியில் இருந்து ஓய்வுபெற்றதும் பத்திரிகை துறையில் கால் பதித்தார். கடைசியாக அரசியலில் நுழைந்து தற்போது மணிப்பூரின் முதல்வராகி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘நான் முதல்வராக பதவியேற்பேன் என கனவில்கூட நினைத்து பார்த்தது இல்லை. இந்ததேர்தலில் மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித் துள்ளனர். ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்புவது சரியல்ல. ஆளுநரிடம் 32 எம்எல்ஏக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்பதை காண்பித்து விட்டோம். காங்கிரஸ் அதை செய்யவில்லை’’ என்றார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.