ஏப்ரல் 14-ஆம் தேதி முதல், பாஜக சார்பில் பல்வேறு வாராந்திர விழா

வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்தமக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்தியஅரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரசாரம் செய்ய இளைஞர்களை நல்லெண்ணத் தூதர்களாகப் பயன்படுத்தும்படி கட்சியின் மூத்த தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.


உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலப் பேரவைத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முதன்முறையாக தில்லியில் வியாழக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள், முடிவுகள் குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அனந்த்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


டாக்டர் அம்பத்கரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல், பாஜக சார்பில் பல்வேறு வாராந்திர விழாக்களை நடத்த முடிவுசெய்யப்பட்டது. மேலும், கட்சியின் நிறுவன நாளான வரும் ஏப்ரல் 6-ம்தேதி, தூய்மை இந்தியா திட்டத்தில் கட்சியின் உயர்நிலைத் தலைவர்களும், தொண்டர்களும் பெருவாரியாகப் பங்கேற்று தூய்மைப்பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.


மின்னணுப் பணப் பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்வதற்காக மத்தியஅரசு உருவாக்கியுள்ள ’பீம்' செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கட்சித்தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும் டாக்டர் அம்பேத்கரின் பணிகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த நூல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.


'தற்கால இளைஞர்கள் செய்தித்தாள், தொலைக் காட்சிகளைவிட செல்லிடப்பேசிகளையே மிகவும் சார்ந்துள்ளனர். ஆகையால் செல்லிடப்பேசிகள் மூலம் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே கட்சி மற்றும் அரசின்பணிகளையும், திட்டங்களையும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நல்லாட்சியையும், மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யும் நல்லெண்ணத் தூதுவர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, ’உத்தரப் பிரதேசத்தில் ஜாதியவாதம், குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும் பிரதமர் மோடியின் தலைமை மற்றும் நல்லாட்சிமீது நம்பிக்கை வைத்தும் பாஜகவுக்கு மக்கள் அபார வெற்றியை தந்துள்ளனர்; இதேபோல் அடுத்த பெரும்சவாலாக விளங்கும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடுகளை கட்சிப்பிரமுகர்கள் இப்போதே தொடங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.


நன்றி கூறும் தீர்மானம்: இக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றியைத் தேடித்தந்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் தலைமையில் அயராது பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த மாநிலங்களில் பாஜக அரசுகள் நல்லாட்சியைத் தந்து, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் என அத் தீர்மானத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.


இந்தத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வழிமொழிய, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அனந்த்குமார் கூறினார்.
கூட்டத்தின் முடிவில், அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...