நடந்து முடிந்த ஐந்துமாநில சட்டமன்றத் தேர்தல்களில், இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க தனிப் பெரும்பான் மையுடன் ஆட்சியை பிடித்தது. இரண்டுமாநிலங்களில், கூட்டணி அமைத்து அரியணையில் ஏறியது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட் டர் பக்கத்தில், 'பதவியேற்கும் யோகி ஆதித்யநாத், கேஷவ்பிரசாத் மௌரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள். உத்தரப் பிரதேசத்துக்கு சேவையாற்ற வாழ்த்துகள். இந்த புதியக்குழு, உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இவர்களின் கீழ் உத்தரப்பிரதேசம் சாதனைவளர்ச்சியை எட்டும்.
எங்கள் முதன்மை குறிக்கோள் மற்றும் நோக்கம் என்பது வளர்ச்சி. உத்தரப் பிரதேசம் வளர்ந்தால், இந்தியாவே வளரும். நாங்கள் உத்தர பிரதேச இளைஞர்களுக்கு சேவையாற்ற விரும்புகிறோம். அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கவிழைகிறோம். மக்களின் ஆசியாலும், தொண்டர்களின் கடின உழைப்பாலும் பா.ஜ.க ஐந்தில்நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் மக்கள்சக்தி, புதிய இந்தியாவுக்கு வித்திடுகிறது.' என்று பதிவு செய்துள்ளார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.