இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப் பட்டுள்ள இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார்.

ஜம்மு – நகர் தேசியநெடுஞ்சாலையில் 286 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இந்தத்திட்டத்துக்கு ரூ.3,720 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச் சாலைபணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த சாலையின் ஒருபகுதியாக நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையால் ஜம்முவுக்கும் நகருக்கும் இடையில் 30 கி.மீ. தூரம் குறையும். மொத்தம் 9.2 கி.மீ. நீளத்துக்கு இரு வழி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காஷ்மீர் மாநிலத்தில் செனானி நஷ்ரி இடையே கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்’’ என்றார். அன்றையதினம் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார்.

இந்த சுரங்கப்பாதை 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுரங்கப்பாதையில் காற்றோட்டம், தீதடுப்பு, சிக்னல்கள், தகவல்தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும்வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.