ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும்போது, யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வருவாய்துறை செயலர் ஹன்ஸ்முக் ஆதியா கூறியதாவது: ஜிஎஸ்டி., வரிவிதிப்பு முறையை, வரும், ஜூலை, 1 முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை வரும்போது, யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்த மாட்டோம். தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களை, உடனடியாக சேர்க்க மாட்டோம்.
உதாரணமாக, கல்வி, மருத்துவம் போன்றசேவைகள், ஜிஎஸ்டி., வரிவிதிப்பில் கொண்டுவரப்படாது.முதல் ஆண்டில், புதியவரி விதிப்பு மூலம், எவ்வளவு வசூலாகிறது என்பதை பொறுத்தே, அடுத்தடுத்த ஆண்டுகளில், இது வரை விலக்கு அளிக்கப்பட்டவர்களும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்படுவர். அதேபோல், தற்போதுள்ள வரி விகிதங்களைவிட அதிக வரியும், புதிய வரிவிதிப்பில் விதிக்கப்படாது.
எந்தெந்த பொருட்கள், சேவைகளுக்கு எவ்வளவுவரி விகிதம் விதிப்பது என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர் தலைமையிலான, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.