'ஜன சங்கில் இருந்துதான் பா.ஜ.க. துவங்கப்பட்டது. 'ஜன சங்கம் கடந்த 1951-ம் ஆண்டு துவங்கப் பட்டது. அதில் பலகட்சிகள் இணைய, கடந்த 1977-ம் ஆண்டு, அதன்பெயர் 'ஜனதா என்று மாற்றப்பட்டது.
இதையடுத்து, எமர்ஜென்சி காலக் கட்டத்துக்குப் பின் 'ஜனதா கட்சி' கலைக்கப் பட்டது. பின், அதில் இருந்தவர்கள் 'பாஜக' என்ற கட்சியை கடந்த 1980-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி துவங்கினர். அதன் முதல்தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'பாஜக' துவங்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன், 37-வது ஆண்டுவிழா இன்று கட்சியால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீன்தயாள் உபாத் யாயா சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கட்சிக்காக பாடுபடும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்கள் பா.ஜ.க மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். குறிப்பாக, ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்' என கூறியுள்ளார்.
கடந்த, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்மூலம் மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரான பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.