ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப் போகவும் தூக்கில்தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்த வரை அது ஒரு நம்பிக்கைசார்ந்த பிரச்சனை என்றும் உமா பாரதி கூறினார்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர்கோவில் என்பது என்னை பொறுத்த வரை நம்பிக்கைக் குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமைகொள்கிறேன் என்றார்.
ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்வர் ஆதித்ய நாத் உடன் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உமா பாரதி, நாங்கள் ராமர் கோவில் கட்டுவது குறித்த பேசத் தேவையில்லை இந்தப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றும் மாற்றுமக்கள் கிடையாது. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்நாத் கோவில் தொடர்பான பணிகளுக்கு தலைவர் என்றும் கூறினார்.
ராமர் கோவிலுக்காக நான் ஜெயிலுக்குபோக வேண்டுமானாலும் போவேன். தூக்கில் தொங்க வேண்டுமானாலும் தொங்கதயாராக இருக்கிறேன் . இந்த பிரச்சினையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது பிற வழிகளில் தீர்வு காண்பதா என்பதை கோர்ட்டுதான் தீர்மானிக்கவேண்டும் .
அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையை வெளியில்பேசி தீர்க்க அறிவுறுத்தியிருப்பதையும் செய்தியாளர்களிடம் பேசும்போது உமாபாரதி சுட்டிக்காட்டினார். ராமர்கோவில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதனை அதிகம்பேச உமாபாரதி மறுப்பு தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.