ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவுரை கூறியுள்ளார்.
குடிமைப்பணிகள் தினத்தையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
குடிமைப் பணி அதிகாரிகள் நடுநிலைமையுடன் கடமை ஆற்றவேண்டும். முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டக் கூடாது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தவறான உத்தரவு போட்டால் சட்டதிட்டத்தை எடுத்துக்காட்டும் துணிச்சலுடன் இருக்கவேண்டும். அரசுக்கு தலைமை வகிக்கும் அரசியல்வாதிகள் தவறாக செய்யச் சொன்னால் அது சட்டவிதிகளுக்கு புறம்பானது என்பதை எடுத்துச்சொல்லுங்கள். ஆவணங்களில் கையெழுத்திடாதீர்கள்.
சமூகத்தில் மாற்றம் ஏற்பட சிறப்பான பங்களிப்பு வழங்கு பவர்கள் அதிகாரிகள்தான். ஆட்சி நிர்வாக பணி அதிகாரம்மிக்க பணி. அதேவேளையில் அந்த அதிகாரம் மிகப் பெரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. ஆட்சி நிர்வாக பணியில் உள்ளவர்கள் கடமை ஆற்றும்போது நடுநிலைமை தவறக் கூடாது. இதுவும் இந்தபணியின் மிக முக்கிய அம்சம். நடுநிலைமை தவறும்போது முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும்..
சில அதிகாரிகள் முடிவு எடுக்காமல் ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த தயக்க நிலைமையால் நாட்டின் நலனுக்கு தீங்கு ஏற்படும்.
தேவைப் பட்டால் மூத்த அதிகாரிகளுடன் விவாதித்து தெளிவுபெற்று விடைகாணுங்கள். முடிவு எடுப்பதில் எந்தவித தயக்கமும் இருக்கக் கூடாது. இந்திய ஆட்சி அமைப்பில் வெற்றிட நிலை எப்போதும் ஏற்பட்ட தில்லை. இதற்கு ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் பொறுப்புணர்வே காரணம்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.