பாஜக தாஜா அரசியல் செய்யாது

இந்தியாவில் இந்துக்கள் பெரும் பான்மையாக இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கலாபுர்கி நகரில் பாஜக தேசிய பொது செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

 

”இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் இருக்கும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். இந்துக்கள் சிறுபான்மையினராக மாறினால், ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறதோ அதுதான் இங்கும் நடக்கும்.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் உண்மையை மறந்து விடக் கூடாது. மதச்சார்பின்மை, மத சகிப்புத்தன்மை ஆகியவை இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பெரும்பான்மை மக்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்கும்வரை, அங்கு மதச் சார்பின்மை இருக்கும். பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால், சகிப்புத்தன்மை சிறுபான்மையாக மாறினால், ஆப்கானிஸ்தான் சூழல் போன்று உருவாகிவிடும். இந்துக்கள் அல்லாதோர் பெரும்பான்மையானால், ஷரியத்சட்டம் பற்றிப் பேசுவார்கள். அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் பற்றிப் பேசமாட்டார்கள்.

திருப்திப்படுத்தும் அரசியல் செய்யும் செயலை காங்கிரஸ் நிறுத்தி, நேர்மையான அரசியல்செய்ய வேண்டும். திருப்திப்படுத்தும் அரசியல் அதிகமான பாகிஸ்தானைத்தான் உருவாக்கும். தற்காலிகமாக அதிகாரம் வழங்கிடலாம். ஆனால், அதிகமான பாகிஸ்தானைத்தான் உருவாக்கும். இது நடக்கவேண்டாம் என நீங்கள் விரும்பினால், நாட்டின் முதல் கொள்கையான நேர்மையான அரசியல் செய்யுங்கள்.

ஆனால், நாட்டின் முதல் கொள்கையை இன்று காங்கிரஸ் கட்சி மறந்து விட்டது துரதிர்ஷ்டம். பார்வையற்றவர்களாக மாறி, தேசபக்திக்கும், தீவிரவாதத்துக்கும் வேறுபாட்டை அறியமுடியாமல் இருக்கிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், தலிபான்களையும் ஒப்பிட முயல்கிறார்கள்.

பாஜக திருப்திப்படுத்தும் அரசியல்செய்யாது. எங்கள் மந்திரம் என்பது வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இந்துத்துவாவிற்கு உண்மையாக நடப்பதும் ஆகும்”.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...