நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்

1) நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).

1.A) குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப்பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய்
வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப்பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும்
கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது.

பத்துக்கோடி ரூபாய் கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.

2) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட்
தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப் படும். தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG) நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.

3) மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இது அப்படியே தொடரும்.

4) நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,
தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்விதமாற்றமும் இன்றி நீடிக்கிறது.

5) தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு
மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

6) மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ
இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்காற்றை ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of
NEET is to regulate the seat allotment).

7) எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில் எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள் நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.

8) நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.

9.)தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக் கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங்
கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

நன்றி : நியூட்டன் அறிவியல் மன்றம்

One response to “நீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்”

  1. vishwa says:

    கீழே சொல்லப்படும் விடயங்கள் மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது. பதில் அளிக்க வேண்டுகிறேன். இவைகள் உண்மையென்றால் பிரிவினைக்கான விதைளை
    நீர் ஊற்றி பிஜெபி வளர்கிறது என்று அர்த்தம். இக்குற்றசாட்டுகளை மறுக்க முடியுமா

    http://tamilarasial.com/2017/05/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF/

    1.NEET-SS இல் டொமிசிலரி கோட்டா எனப்படும் மாநிலத்திற்கான கோட்டா அறவே கிடையாது. முற்றிலுமாக நீட் நீக்கிவிட்டது! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான சூப்பர் ஸ்பசாலிட்டி படிப்புக்கான இடங்கள் உள்ளது( 192 இடங்கள்). விரல் விட்டு எண்ணக் கூடிய இடங்களை மட்டுமே உருவாக்கி வைத்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோகாமல் வந்து நம் இடங்களை நிரப்பி விட்டு செல்கிறார்கள்.
    2.இதே நிலைமையை தான் NEET-PG வெகு விரைவில் அரங்கேற்ற போகிறது. அதன் முதல் படி தான் சர்வீஸ் கோட்டா நீக்கம். சர்வீஸ் கோட்டாவை தூக்கி விட்டால் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டை நீக்கையில் கூப்பாடு போட கூட ஆள் இருக்காது
    3.NEET-UG
    அப்படியே தட்டு தடுமாறி எழுதி மாநிலத்தின் 85% இட ஒதுக்கீட்டில் நுழையலாம் என்று எண்ணினால் , அங்கு தான் திருப்புமுனையே. நீட் இந்த தேர்வின் மூலம் அதன் ELIGIBILITY CUTOFF ஆக 50 percentile என முடிவு செய்துள்ளது. அதை பூர்த்தி செய்யாத பட்சத்தில் கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற முடியாது. நிற்க. இங்கு eligibility என வரையறுக்கப்பட்டது 50 ‘PERCENTILE’ ; percentage அல்ல. ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர் என்றால் 50 percentile என்பது தேர்வு எழுதியதில் 50 சதவீதத்தினரை விட நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆக நம் மாணவர்களின் eligibility என்பது அவர்கள் பெறும் மதிப்பெண் அல்ல; மற்ற மாநில மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை பொறுத்தே உள்ளது. மாநிலத்திற்கு ஒரு பாடதிட்டம், மொழிக்கு ஒரு கேள்வி தாள் என இருக்கும் பட்சத்தில் eligibilityஐ மட்டும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சேர வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்.குறைந்த பட்சம் மாநில தரவரிசையின் அடிப்படையிலாவது இந்த தகுதி நிர்ணயிக்கப்படவேண்டாமா? இந்த Eligibility பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் மாநில கவுன்சிலிங்கில் நிரப்பப்படாத இடங்களை ஆல் இந்தியா கவுன்சிலிங் நிரப்பிக் கொள்ளும். 85% இடங்கள் நமக்கு தான் என்பதெல்லாம் கண்துடைப்பு ஜாலம்.

    இன்று உங்கள் கட்சி ஒழுங்காக செயல்படவில்லை என்றால் என்றுமே வாயப்பில்லை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...