மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில், 'நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கல்லூரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவற்றில், 7,000 கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அறிக்கைஅளிக்காத 4,000 கல்லூரிகளுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே நீட்தேர்வு நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது. இதிலிருந்து தற்போது தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. நாடுமுழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. வரும் வருடங்களில், இந்தப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என்று கூறினார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.