நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்டவிருப்பம் என பாஜக தேசியசெயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும்கூறியதாவது: நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்கியிருக்கிறது. மோடி ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டு மக்களைசந்திக்க திட்டமிட்டிருக்கிறோம்.
தங்களுக்கு கிடைக்கும் ஆதாரப் பூர்வமான தகவல்களை கொண்டே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகின்றனர். இது அவர்களதுகடமை. சிபிஐ, வருமான வரித்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.
நிகழாண்டு போதியமழை இல்லை. அடுத்த ஆண்டு மழைபெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற வறட்சியான காலங்களில் காவிரி, வீராணம் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளை தூர்வாரும்பணிகளை விரைந்துசெய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இனிவரும் காலங்களில் பெய்யும் மழை நீர் வீணாகாது.
ரஜினிகாந்த் நல்ல மனிதர். பெரிய நடிகர். அவர் அரசியலுக்குவருவது அவரின் சொந்த விருப்பம். அதுபோல் அவர் ஏனைய தலைவர்களை புகழ்ந்துபேசியதும் அவரின் உரிமை. அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டியது அவர்தான் என்றார் இல. கணேசன்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.