பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும்

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும் என்று ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றது. கடந்த 26-ம் தேதியுடன் மோடி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை பிரமாண்டமாக கொண்டாடி வரும் பாஜக, வரும் ஜூன் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் 3 ஆண்டு கால ஆட்சி குறித்து ‘டைம்ஸ் நவ்’ சேனல்- வோட்டர்மூட் ரிசர்வ் அமைப்பு இணைந்து பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. கடந்த மே 8 முதல் 20-ம் தேதி வரையில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 52 மக்களவைத் தொகுதிகளில் 15,600 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு வங்கி 9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி அந்த கூட்டணி வரும் 2019 மக்களவைத் தேர்தலில் 342 இடங்களைக் கைப்பற்றக்கூடும். பாஜக மட்டும் தனியாக 284 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும். காங்கிரஸுக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், ஒடிஷாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்திக்கும். திரிணமூல் காங்கிரஸின் செல்வாக்கு 40 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக குறையக்கூடும். இதேபோல இடதுசாரி கட்சிகளின் வாக்கு சதவீதம் 30 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக சரியும் வாய்ப்புள்ளது.

ஒடிஷாவில் பிஜு ஜனதா தளத்தின் வாக்கு வங்கி 45 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாகக் குறையும். அந்த மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு 21 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கும். காங்கிரஸுக்கு 13 சதவீத ஆதரவு மட்டுமே கிடைக்கும்.

மிகச் சிறந்த தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 60 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 11 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 3.62 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

நாட்டின் மிகச் சிறந்த பிரதமர் என்ற வரிசையில் 31 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 23 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

வெளியுறவு கொள்கையில் பிரதமர் மோடியின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு மிகச் சிறப்பாக உள்ளதாக 66.18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 27.62 சதவீதம் பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ உட்பட பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மோடி சிறப்பாக செயல்படுவதாக 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 24.10 சதவீதம் பேர் மட்டுமே இல்லை என்று கூறியுள்ளனர்.

முத்தலாக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது சீர்திருத்த முயற்சி என்று 61 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.